இருந்தும் இன்னொருவனிடம் கை எந்துபவன் மிகப்
பெரிய பிச்சைக்காரன்.ஏனோ, இந்த வாக்கியம்
இன்று ஓட்டுக்கு காசு வாங்கும் வாக்காளரை ஞாபகபடுத்துகிறது.ஓட்டுக்கு காசு கேட்டு கை
எந்துபவர்களும் எனது பார்வையில் மிகப் பெரிய பிச்சைக்காரர்கள்.
இவர்களை
விட மிகப் பெரிய பிச்சைக்காரர்கள்
இந்த நாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் ஓட்டுக்கு காசு கொடுபவர்கள். ஓட்டுக்கு காசு
வாங்குபவர்கள் கண் தெரியாத பிச்சைக்காரர்கள்.
ஓட்டுக்கு காசு
கொடுப்பவனோ, கண் தெரியாத பிச்சைக்காரன்
தட்டில் இரண்டு ரூபாயை போட்டு,
அதே தட்டில் நாலு ரூபாயை எடுக்கும்
மிகப் பெரிய பிச்சைக்காரர்கள்.
ஓட்டுக்கு காசு
வாங்கி வசதியாக வாழ்ந்த ஒரு வாக்காளரை எனக்கு காட்டுங்கள். ஆனால் காசு கொடுத்த
வேட்பளார்களில் ஒருவன் வசதியாக வாழ்ந்து
கொண்டு தான் இருக்கிறார். உன்
உரிமையை ஒரு பணத்திற்கு விற்றுவிட்டு,
இன்று ஊழல் வளர்ந்து விட்டது
என புலம்புவதில் என்ன அர்த்தம்.
இந்த இந்திய தேசத்தில்
பாதி பேர் குருடர்கள் தான் அதனால் தான் வேட்பாளரின் வாக்கை மட்டும் நம்பி தன் வாக்கை
வீணாக்கி விடுகின்றனர்.
என்றோ வாழ்ந்த
ஏதோ ஒரு நல்ல தலைவர்களுக்காக இன்றும் அதே கட்சிக்கு
தன் கடமை ஓட்டை கணிக்கையாக்குகிறது ஒரு ஜனநாயக கூட்டம்.
ஒவ்வொரு தொகுதியிலும்
நிற்கும் வேட்பாளர்கள் என்னவோ வெவ்வேறு நபர்கள் தான். ஆனால் கட்சித் தலைவரையே அனைத்து
தொகுதியிலும் வேட்பாளராக பாவித்து கருப்பு மை தடவிக்கொள்கிறது ஒரு ஜனநாயக கூட்டம்.
சாதிக்காக
ஆள்க்காட்டி விரலை அடமானம் வைக்கும்
ஒரு ஜனநாயக கூட்டம்.
சினிமா நட்சத்திரங்களின்
நகைச்சுவை பேச்சுக்கு தான் வாக்கை சிதறவிடும் ஒரு ஜனநாயக கூட்டம்.
இந்திய தேர்தலில்
வேட்பாளருக்கும் கொள்கைகள் கிடையாது வாக்காளருக்கும் கொள்கைகள் கிடையாது.
தேர்தலை நினைக்கும் போது வைரமுத்துவின் வரிகள்
சில நினைவுகளில் வடிகிறது.
"தேர்தல்
ஆடுகளுக்கு
வெட்டரிவாள்
எடுக்கும் விழா
இந்த
ஆடுகளுக்கு
ஏக
சந்தோஷம்
உரிமை
வந்துவிட்டதாம்
தங்கள்
கசாப்புக்
கடைகளைத்
தாங்களே
தேர்ந்துகொள்ள"
இந்த கசாப்புக் கடைகளை காவல் நிலையமாக
மாற்றும் தேர்தல் எது?
- செல்வம் வாசு
No comments:
Post a Comment